கர்நாடக இசை அனைவருக்குமானது

கர்நாடக இசையில் உள்ள பல்வேறு பரிமாணங்களை மதச் சார்பின்றி மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் இசைக் கலைஞர்கள் மீதான அடக்கு முறையை எதிர்த்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத் பேரவை தங்களது கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

மேலும், கர்நாடக இசையோ அன்றி பரத நாட்டியமோ ஓர் மதத்திற்கோ அல்லது இனத்திற்கோ சார்புடையது அன்று.   இற்றைய நாளில், இசைக்கப்படும் கர்நாடக இசையானது,  சற்றொப்ப  2500 ஆண்டுகட்கு முன்னர் தோன்றிய தமிழிசையிலிருந்து அண்மையில் பரிணமித்ததே ஆகும். இவ்விசையானது, சைன, புத்த, ஆசீவகம் போன்ற பல மத எல்லைகளைக் கடந்து பழங்காலத்திலிருந்தே இசைக்கப்பட்டும், அம் மதங்களுக்கு  உண்டான  பல் வேறு பாடல்களைக்  காலங் காலமாய்ப் பாடியும் வருகிறது.   நாகரிகம் வளர்ச்சியடைய தனி மனித சுதந்திரம்  முக்கியத்துவம் வாய்ந்தது.

என்றென்றும் அமைதியையும், ஒற்றுமையையும் விரும்பும் பல்வேறு மதங்களைச் சார்ந்த தமிழர்களுக்கிடையே, இது போன்ற விரும்பத் தகாத நிகழ்வுகள், அவர்களுக்கிடையேயான உறவிற்கு பங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது.

இச் சூழ்நிலையில், இசை வல்லுனர்களுக்கும், பாடகர்களுக்கும், தனி மனித சுதந்திரம், சமூக, மத நல்லிணக்கத்திற்குமான செயற்பாடுகளிலும் உறு துணையாய் நிற்போம்.