உதவும் இதயங்கள்

நாம் அனைவரும் இந்த அமெரிக்க நாட்டிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களாய் நல்வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எத்தனையோ சரித்திரங்களையும் படைத்து இருக்கிறோம். அதேசமயம் எத்தனையோ சவால்களையும் சந்தித்து இருக்கிறோம்.

குறிப்பாக நமது நண்பருக்கோ குடும்பத்தினருக்கோ எதிர்பாராத விபத்து அல்லது மரணம் நிகழும்போது நாம் சந்திக்கும் சவால்களை வார்த்தைகளால் சொல்ல இயலாது!  நாம் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நிற்போம்! அத்தகைய அசாதாரண சூழலில் உங்களுக்கு உதவிட பெட்னா அமைப்பு தொடங்கியுள்ள ஒரு புதிய குழு “உதவும் இதயங்கள்”.  உங்கள் நண்பருக்கோ உறவினருக்கோ எதிர்பாராத மரணம் நிகழும்போது எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

24×7 உதவும் இதயங்கள்
தொலைபேசி எண்
1-866-FETNAHH

உடல் தகனம் செய்யும் முறை, புதைக்கும் முறை அல்லது தாய் நாட்டிற்கு எடுத்துச் செல்லும் முறை குறித்த அனைத்து தகவல்களும் உதவிகளும் உடனடியாக ஏற்பாடு செய்யப்படும்.

உங்கள் பேராதரவிற்கு நன்றி,
உதவும் இதயங்கள்

Helping Hearts

We are all enjoying great lives in this great land of opportunities. We have created histories. At the same time, we have encountered a lot of challenges!

Especially when any of our friends or family members encounters an emergency situation or death, the challenges we face cannot be explained in words. We will be completely clueless on what to do next! To help you in such unexpected situations, FETNA has formed  the new wing called “Helping Hearts”. In the event of the death of a friend or a family member, please immediately contact us.

24×7 Helping Hearts
Emergency Number
1-866-FETNAHH

We will instantly help you and guide you on the procedures associated with burying or cremating the remains or transporting it to your homeland.

Thank you for your continued support,
Helping Hearts