இரங்கல் செய்தி!!!

மாபெரும் மனிதநேயவாதியும், சிறந்த தமிழுணர்வாளரும், தாம்பா (Tampa, Florida, USA) தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், தமிழ் சிநேகம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான,  உயர்திரு. ஜெய் தபராஜ் அய்யா அவர்கள் நேற்று (15 மே 2018) காலை 10:19 மணிக்கு காலமானார் என்ற துயரச் செய்தியை மிகுந்த மன வருத்தத்துடன் பேரவை தெரிவித்துக்கொள்கின்றது. 

 
கடந்த காலங்களில், பேரவைச் செயற்குழுவிலும், 2008-ஆம் ஆண்டு புளோரிடாவில் நடைபெற்ற  பேரவைத் தமிழ் விழாவில் உணவுக்குழுவுக்கு  தலைமை ஏற்று  சிறப்பாகப் பணியாற்றிய இப் பெருமகனார்; தமிழ்ப் பள்ளிகளின்  வளர்ச்சியில் மிகுந்த ஆர்வலர் என்பதையும் தாண்டி, செய்யும் செயலுக்கும் சொல்லுக்கும் வேறுபாடு அறியாத்  தகையாளர். எவ்வித பலனையும் எதிர்பாராமல் செயலாற்றக்கூடிய இப்பெருமகனாரைப்போன்ற உணர்வாளர்களின்  பலத்தினால்  தான் பேரவை போன்ற  பல தன்னார்வத்தொண்டு அமைப்புகள் உயிர்ப்புடன் செயலாற்றுகின்றன. 
 
அன்னாரது மறைவால் ஆழ்ந்த துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் உறுப்பினர் தமிழ்ச்சங்கத்தினர் ஆகிய  அனைவருக்கும் பேரவை தனது ஆழ்ந்த அனுதாபங்களைத்  தெரிவித்துக்கொள்கின்றது. 
  
செந்தாமரை பிரபாகர்
தலைவர், பேரவைச் செயற்குழு. 
 
 நன்றி,

இரமாமணி செயபாலன்,
செயலாளர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.
919-493-2812