கொரோனா நிவாரண நிதி
Sowmiyan D2020-06-25T02:55:22-05:00தமிழுறவுகள் அனைவருக்கும் வணக்கம்: நலம், நலமே விழைக! கொரோனா (COVID-19) என்ற இந்த தீ நுண்தொற்றுக்கிருமி உலகத்தையே பாதித்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் இந்த கையறுநிலை போன்ற தருணத்தில்,நீங்களும் உங்கள் உறவுகளும் நண்பர்களும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். நமது தாய்த்தமிழ் நாட்டில், அடிப்படைத் தேவைகளுக்குக்கூட வசதியற்ற நிலையில் இருக்கும் பலருக்கும், பலரும் பல வழிகளிலும் உதவிக்கொண்டிருப்பதை சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களின் வாயிலாக அன்றாடம் அறிகிறோம். தமிழகத்தில் உள்ள நமது தமிழுறவுகள் பலரிடமிருந்தும் அடிப்படை [...]