எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவுக்கு இரங்கல்
Sowmiyan D2019-05-13T00:59:02-05:00தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தகுந்தவராகத் திகழ்ந்த, சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமையன்று தனது 73 ஆவது அகவையில் காலமானார். அன்னாருக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகுக! கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப் பட்டனம் பகுதியைச் சேர்ந்த தோப்பில் முகமது மீரான், ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சு வண்ணம் தெரு என ஐந்து நாவல்களையும் அன்புக்கு முதுமை இல்லை, தங்கராசு, அனந்த சயனம் காலணி, ஒரு குட்டித் தீவின் வரைபடம், தோப்பில் [...]