தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்!
Sowmiyan D2018-11-27T02:06:53-05:00தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு இரங்கல்! தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்வரலாற்றியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் இன்று (நவம்பர் 26, 2018) இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவிற்கு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவர் அக்டோபர் 2, 1930- இல் மண்ணச்சநல்லூர் - திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள வளனார் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார்.ஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப்பணியில் இருந்தவர். [...]