தமிழ்ச்சங்கங்களுக்கு வேண்டுகோள்
FeTNA Admin2017-01-26T23:40:16-05:00பேரன்புடைய தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் வணக்கம். தமிழ் மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள எழுச்சியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் சல்லிக்கட்டுத் தடை நீக்கத்திற்காக மாணவர்கள் மக்களோடு மக்களாக இணைந்து நடத்தும் அறப்போராட்டம் வெற்றியடைந்துள்ளதை நீங்கள் யாவரும் அறிந்திருப்பீர்கள். தமிழ்நாடு சட்டசபையில் சல்லிக்கட்டுத் தடைநீக்க ஆணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த, சல்லிக்கட்டுத் தடைநீக்கம் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது. இந்த மாநிலச்சட்டம் தொடர்ந்து சல்லிக்கட்டு நடத்த வழிவகுக்குமா? உச்சநீதிமன்றத்திலுள்ள [...]