Monthly Archives: November 2016

கோடை விழா 2016 – நியூ இங்கிலாந்து

2016-12-22T02:54:37-05:00

நெட்ஸ் (நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம்), தனது வருடாந்திர கோடை விழாவை ஹோப்கின்ட்டன் பூங்காவில் ஆகஸ்ட் 27, சனிக்கிழமை கொண்டாடியது. காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான லெமன் ஸ்பூன், ஓட்டப் பந்தயம், தண்ணீர் வாளி என்று பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 100க்கும் மேல் மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். முதன் முறையாக தளத்தில் நேரடியாக வாழைக்காய் பஜ்ஜி, நீர் மோரு, காபி என்று நெட்ஸ் குழு ஏற்படுத்திய [...]

கோடை விழா 2016 – நியூ இங்கிலாந்து2016-12-22T02:54:37-05:00

முத்தமிழ் விழா 2016 – வாசிங்டன்

2016-12-22T02:57:28-05:00

முத்தமிழ் விழா 2016, ஜூலை 09, மேரிலாந்தில் ஊட்டன் உயர்நிலைப் பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நியூஜெர்சியில் நடந்த பேரவையின் 29-ஆம் ஆண்டு தமிழ் விழாவில் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டிய தமிழ் மரபுக் கலைகள் மீண்டும் அரங்கேறி, அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், அறுசுவை மிக்க உணவு முதலியன விழாவிற்கு வந்திருந்தோரை மகிழ்ச்சிப்படுத்தின. பேரவை விழாவுக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் சித்தமருத்துவர் செல்வகணபதி முதலியோர் வந்து விழாவில் சிறப்புரை ஆற்றினர். ஹார்வார்டு பல்கலைகழகத் “தமிழ் [...]

முத்தமிழ் விழா 2016 – வாசிங்டன்2016-12-22T02:57:28-05:00

பேருந்து மகிழ் உலா – நியூயார்க்

2016-12-22T02:47:02-05:00

நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் 2016 -ம் ஆண்டிற்கான பேருந்து மகிழ் உலா மிகச் சிறப்பாக இருந்தது. ஏராளமான தமிழ்க் குடும்பங்கள் கலந்துகொண்டு மகிழ் வடைந்தனர். விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஆகாய மற்றும் வான்வெளி அரங்கத்தில் பல்வேறு விமானங் களையும், அமெரிக்காவின் முதல் குடியரசு தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் இல்லம், பிரமிக்க வைக்கும் லுராய் குகை அமைப்புகள், போடோமோக் நதியில் படகு சவாரி மற்றும் குடியரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன் நினைவிடம் போன்ற வியத்தகு இடங்களை பார்த்தும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து [...]

பேருந்து மகிழ் உலா – நியூயார்க்2016-12-22T02:47:02-05:00

சித்திரை கலாட்டா – மெம்பிஸ்

2016-12-22T02:59:04-05:00

மெம்பிஸ் நகர் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வண்ணம் தென் மத்திய தமிழ்ச்சங்கம் சார்பாக வருடந்தோறும் “சித்திரை கலாட்டா” என்னும் கலை நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடம் மே மாதம் 7 ஆம் தேதி ஹூஸ்டன் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக நடந்தேறியது. தமிழ்ப் பள்ளி மாணவர்களின் பாடல் தொகுப்பும் பற்பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் கரகோசத்தைப் பெற்றது. சென்னை வெள்ள நிவாரண நிதி எவ்வாறு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது பற்றி அறங்காவலர் விக்னேஷ், மேடையில் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். [...]

சித்திரை கலாட்டா – மெம்பிஸ்2016-12-22T02:59:04-05:00

சித்திரைத் திரு(தெரு)விழா – டாலஸ்

2016-12-22T03:00:19-05:00

டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கமும், FULL HOUSE ENTERTAINMENT-ம் இணைந்து நடத்திய சித்திரைத் திருவிழா நிகழ்ச்சியில் புது முயற்சியாகக் கடைவீதி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவகங்கள் எனத் திரு(தெரு) விழாவை நினைவு படுத்தும் வகையில் தெரு விழாவாகக் கொண்டாடினார்கள். பின்னர் கவிஞர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள் சிறப்புரை வழங்கும் போது ஒவ்வொருவர் வீட்டிலும் சமையலறை, படுக்கையறை, வரவேற்பறை இருப்பதைப் போல் நூலக அறையையும் கட்டாயம் உருவாக்குங்கள் என வேண்டுகோள் விடுத்தார். ஹார்வார்டு பல்கலக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நிதி திரட்டும் [...]

சித்திரைத் திரு(தெரு)விழா – டாலஸ்2016-12-22T03:00:19-05:00

இந்திய நாள் ஊர்வலம் – சிகாகோ

2016-12-22T03:01:42-05:00

சிகாகோ தமிழ்ச்சங்கமும், நேபர்வில் இந்திய அமைப்பும் இணைந்து நடத்திய இந்திய நாள் ஊர்வலம் (India Day Parade), ஆகஸ்ட் 14ஆம் நாளன்று மிகச் சிறப்பாக நடந்தது. செயின்ட் லூயிஸிலிருந்து அமெரிக்கன் பறை குழுவும், சிகாகோ குழுவினரும் சேர்ந்து நிகழ்வினை இனிமையாக ஆக்கினர். பல குழந்தைகள், சுதந்திர போராட்டத் தலைவர்களைப் போல் வேடமிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது. நாம் வாழும் சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில், சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் இளையோர் குழு, டுபேஜ், கவுன்டியில், 2 மைல் சாலையைத் [...]

இந்திய நாள் ஊர்வலம் – சிகாகோ2016-12-22T03:01:42-05:00

உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா

2016-12-22T03:03:52-05:00

உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழாக் கொண்டாட்டம் வர்ஜினியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் இருந்து அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். நாள்: 7, 8, 9 அக்டோபர் 2016 - வெள்ளி மாலை,சனி முழுநாள், ஞயிறு காலை இடம்: MERCER MIDDLE SCHOOL AUDITORIUM, 42149 GREENSTONE DRIVE, ALDIE, VIRGINIA 20105, USA [Near [...]

உலகத் தமிழ் அமைப்பின் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா2016-12-22T03:03:52-05:00

தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் – பேரவையின் வாழ்த்துக்கள்

2016-12-22T03:08:10-05:00

தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் - பேரவையின் வாழ்த்துக்கள் ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு பேரவை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இவர் 1.89 மீட்டர் உயரத்தைத் தாண்டி வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். இவர் சேலம் மாவட்டம், தீவட்டிபட்டியை அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்தியா சார்பில் பாராலிம்பிக் போட்டியில் உயரம் [...]

தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் – பேரவையின் வாழ்த்துக்கள்2016-12-22T03:08:10-05:00

இசையறிஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து

2016-12-22T03:09:52-05:00

இசையறிஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு பெருமைக்குரிய ராமன் மகசசே பரிசு கிடைத்திருப்பது அறிந்து பேருவகை அடைந்து அவரை வாழ்த்துகிறது. இவ்வாண்டு ஜூலை முதல் வாரத்தில் பேரவைத் தமிழ்விழாவில் கலந்து தமிழிசைப் பட்டறை நடத்தி, தமிழிசை வரலாறு சொற்பொழிவாற்றியதை அன்புடன் நினைவு கூர்கிறோம். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய நகரங்களில் 2011-ம் ஆண்டு மறுமலர்ச்சிக்காக இசை விழாக்களை நடத்தியது வரலாற்று நிகழ்ச்சி. பேரவை (FeTNA) [...]

இசையறிஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வாழ்த்து2016-12-22T03:09:52-05:00

பேரவையின் புதிய சட்ட திட்ட மாற்றங்கள் ஏற்பு

2016-12-22T03:12:11-05:00

பேரவையின் புதிய சட்ட திட்ட மாற்றங்கள் ஏற்பு பேரவையின் சட்ட திட்ட சீராய்வுக்குழு பரிந்து ரைத்திருந்த மாற்றங்கள் பல கலந்துரையாடல் கூட்டங்களிலும், ஜூலை 3-ம் நாள் நடந்த பொதுக்குழுக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, பேராளர்களின் முறைப்படியான ஒப்புதலுக்காக வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டது. வாக்களிப்ப தற்கான கால அவகாசம் ஆகஸ்டு மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், சீராய்வுக்குழு வின் பரிந்துரைகள் யாவும் பேராளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற செய்தியை மகிழ்வு டன் தெரிவித்துக்கொள்கிறோம். இதுகுறித்த மேல்விபரங்கள் பேராளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். புதிய [...]

பேரவையின் புதிய சட்ட திட்ட மாற்றங்கள் ஏற்பு2016-12-22T03:12:11-05:00