10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா

10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா

2018-10-01T02:50:39+00:00

மாநாட்டுச் செய்தி அறிவிப்பு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் அதன் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, 2019-ஆம் ஆண்டு சூலை திங்கள் 3 முதல் 7 வரை சிகாகோவில் நடைபெறும் என மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. மேலும் தகவல் அறிய​...

10 ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிகாகோ, அமெரிக்கா2018-10-01T02:50:39+00:00

கர்நாடக இசை அனைவருக்குமானது

2018-08-29T01:33:09+00:00

கர்நாடக இசையில் உள்ள பல்வேறு பரிமாணங்களை மதச் சார்பின்றி மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் இசைக் கலைஞர்கள் மீதான அடக்கு முறையை எதிர்த்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத் பேரவை தங்களது கண்டனத்தைத் தெரிவிக்கிறது. மேலும், கர்நாடக இசையோ அன்றி பரத நாட்டியமோ ஓர் மதத்திற்கோ அல்லது இனத்திற்கோ சார்புடையது அன்று.   இற்றைய நாளில், இசைக்கப்படும் கர்நாடக இசையானது,  சற்றொப்ப  2500 ஆண்டுகட்கு முன்னர் தோன்றிய தமிழிசையிலிருந்து அண்மையில் பரிணமித்ததே ஆகும். இவ்விசையானது, சைன, புத்த, ஆசீவகம் போன்ற [...]

கர்நாடக இசை அனைவருக்குமானது2018-08-29T01:33:09+00:00

கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி!

2018-08-10T02:46:58+00:00

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி! தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், தி.மு.க கட்சியின் தலைவராகவும், முத்தமிழ் அறிஞராகவும் விளங்கிய கலைஞர் திரு.கருணாநிதி அவர்கள் இன்று தனது 95வது அகவையில் இயற்கை எய்தினார். தந்தை பெரியாரின் சீடராக, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தமிழ்நாடு அரசியலில் ஈடுபடத் தொடங்கியவர் கலைஞர். இந்திய மக்களாட்சி வரலாற்றிலேயே தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 [...]

கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி!2018-08-10T02:46:58+00:00

தூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்!!!

2018-05-23T01:25:16+00:00

பேரன்புடையீர் வணக்கம்.   தூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்!!!     தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் என்ற பெயரில் தாமிர உற்பத்தி ஆலையானது செயல்பட்டுவருகின்றது. இவ்வாலையிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையினால், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாராப்பகுதிகளில் வாழும் மக்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் அன்றாட வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.    மக்களில் பெரும்பாலோருக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் கொடிய நோயான புற்று நோயால் பாதிப்புக்கு உள்ளாகி, சொல்லவொனாத் துன்பத்திற்கு ஆளானதைத் தொடர்ந்து; இனிவரும் [...]

தூத்துக்குடி மக்களுக்கு நேர்ந்த அவலம்!!!2018-05-23T01:25:16+00:00

இரங்கல் செய்தி!!!

2018-05-19T00:44:43+00:00

மாபெரும் மனிதநேயவாதியும், சிறந்த தமிழுணர்வாளரும், தாம்பா (Tampa, Florida, USA) தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், தமிழ் சிநேகம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான,  உயர்திரு. ஜெய் தபராஜ் அய்யா அவர்கள் நேற்று (15 மே 2018) காலை 10:19 மணிக்கு காலமானார் என்ற துயரச் செய்தியை மிகுந்த மன வருத்தத்துடன் பேரவை தெரிவித்துக்கொள்கின்றது.    கடந்த காலங்களில், பேரவைச் செயற்குழுவிலும், 2008-ஆம் ஆண்டு புளோரிடாவில் நடைபெற்ற  பேரவைத் தமிழ் விழாவில் உணவுக்குழுவுக்கு  தலைமை ஏற்று  சிறப்பாகப் பணியாற்றிய [...]

இரங்கல் செய்தி!!!2018-05-19T00:44:43+00:00

தமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்!!!

2018-05-12T06:46:58+00:00

டெக்சாசில் நடைபெற உள்ள பேரவையின் 31 ஆவது தமிழ் விழாவிற்கான ஏற்பாட்டு வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டும்  விழாவில் இசைக் கலைஞர்கள், இசை ஆய்வாளர்கள், அரசுத் துறை அதிகாரிகள், நாட்டுப்புறக் கலைஞர்கள், திரைக் கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள் என பல சிறப்பு விருந்தினர்கள் பேரவை விழா மேடையை அலங்கரிக்க உள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற பேரவையின் 28 ஆவது தமிழ் விழாவில் தொடங்கப்பட்ட ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணியின் தொடக்க [...]

தமிழ்நாட்டின் கல்வியும், பேரவையின் நிலைப்பாடும்!!!2018-05-12T06:46:58+00:00

FeTNA Vilakku Awards

2018-04-24T02:25:42+00:00

The function to present 2016 awards of Vilakku was held on March 10, 2018 at Metropole Hotel, Madurai. The awardees Professor Raj Gowthaman and Poet Samayavel were felicitated by prominent writers and critics. Vilakku Vice-President G. Rajaram, New Haven, CT presented the awards. The event was organized by A. Vetrivel, Madurai and R. Mahalingam, Bengaluru. [...]

FeTNA Vilakku Awards2018-04-24T02:25:42+00:00

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் சுற்றுச்சூழல் தீமைகளும்!

2018-04-10T07:57:30+00:00

ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (Sterlite Industries) எனப்படுவது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில் அமைந்துள்ள தொழிற்சாலை ஆகும். இங்கு செம்புக் கம்பி, தாமிரம், கந்தக அமிலம் பாஸ்பரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, ஆலையை விரிவுபடுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. இதனிடையே, தமிழ்நாடு சிப்காட் நிறுவனம் தங்களிடம் உரிய காரணத்தை தெரிவிக்காமல், தங்கள் நிலத்தை ஸ்டெர்லைட் ஆலைக்காக கையகப்படுத்தியதாகவும் அப்பகுதிவாழ் மக்கள் [...]

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் சுற்றுச்சூழல் தீமைகளும்!2018-04-10T07:57:30+00:00

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

2018-04-10T08:03:43+00:00

பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு பண்டிகைக் கொண்டாட்டங்கள் உங்களுக்கு இவ்வாண்டு நிறைவோடு, சீரும் சிறப்புமாக அமைய வாழ்த்துகின்றோம். நேற்று (01/24/2018) புதன்கிழமை தாய்தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏற்பட்ட அவமரியாதை அறிந்து கவலை உற்றோம். இது ஒரு வருந்தத்தக்க செய்தியாகும்; தமிழ்ச்சங்கப் பேரவை தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காத அவலச் செயலுக்கு விளக்கம் கேட்கவோ விவாதம் செய்வதோ நம் நோக்கமல்ல. தாய்மொழி வாழ்த்துப் பாடல்களோ, தேசப் பண்களோ வெறும் [...]

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு2018-04-10T08:03:43+00:00

நந்தன் கதை – நாடகம்

2017-12-07T08:35:36+00:00

வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் ஐந்தாம் ஆண்டு தமிழிசை விழா டிசம்பர் 29  வெள்ளிக்கிழமை  சென்னையில் நடை பெறுகிறது. அதில் திருபுவனம் கோ ஆத்ம நாதன் அவர்களின் நந்தன் கதை நாடகம் அரங்கேற்றப் படுகிறது.

நந்தன் கதை – நாடகம்2017-12-07T08:35:36+00:00